Home Featured தமிழ் நாடு “மிருகங்களால் சிரிக்க முடியாது” – சசிகலாவுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!

“மிருகங்களால் சிரிக்க முடியாது” – சசிகலாவுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!

635
0
SHARE
Ad

sasikala-panner-சென்னை – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆட்டம் கண்ட சசிகலா தரப்பு, உடனடியாக அவரை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதோடு, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, பன்னீர் செல்வம் சிரித்துப் பேசியதாகக் கூறும் சசிகலா, பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் திமுக இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்.

#TamilSchoolmychoice

பன்னீர் பதிலடி:

இந்நிலையில், சசிகலா கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பன்னீர் செல்வம், “மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் இடையில் சிரிப்பு ஒன்று தான் வேறுபாடு. மிருங்களால் சிரிக்க முடியாது. ஆனால் மனிதர்களால் சிரிக்க முடியும். எனவே சிரிப்பது ஒரு குற்றமில்லை” என்று கூறினார்.

ஸ்டாலின் ஆதரவு:

இதனிடையே, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரால் மிரட்டப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

தம்பித்துரை எதிர்ப்பு:

பன்னீர் செல்வத்தின் இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்று தான் என்று கூறிய, மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை, பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகத் தெரிவித்தார். விரைவில் ஆளுநர் சென்னை வந்து சசிகலா தலைமையிலான அமைச்சரவைக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றும் தம்பித்துரை கூறினார்.