Home Featured நாடு கிள்ளான் ஆற்றில் 2 மீட்டர் நீள முதலை – மீன் பிடிப்போரே கவனம்!

கிள்ளான் ஆற்றில் 2 மீட்டர் நீள முதலை – மீன் பிடிப்போரே கவனம்!

863
0
SHARE
Ad

Crocodileகிள்ளான் – கிள்ளான் ஆற்றில், சுமார் 2 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளதால், கோத்தா பாலத்தில், மீன் பிடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இது குறித்து கோத்தா ராஜா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் ஓமார் மொகமட் கூறுகையில், “அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கடல் கொந்தளிப்பு காரணமாக அந்த முதலை பாதிக்கப்பட்டு, அதன் இயல்பான பழக்கம் மாறி இருக்கலாம். அது உப்புநீரில் வசிக்கும் உயிரினம் என நம்பப்படுகின்றது. தொடர்ந்து அந்த முதலையைக் கண்காணித்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

சிலாங்கூர் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்களின் இயக்குநர் அப்துல் ரஹிம் ஓத்மான கூறுகையில், “அந்த முதலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆனால் நாங்கள் அதனைப் பிடிக்கப் போவதில்லை” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், ஆற்றில் முதலை இருப்பதற்கான எச்சரிக்கைப் பலகைகள் அங்கே வைக்கப்படும் என்று கிள்ளான் மாநகர சபைத் தலைவர் யாசித் பிடின் தெரிவித்தார்.