Home Featured தமிழ் நாடு ஓபிஎஸ்-பி.எச்.பாண்டியன் கைகோர்த்தனர்! ஜெ.மரணம் மீது விசாரணை!

ஓபிஎஸ்-பி.எச்.பாண்டியன் கைகோர்த்தனர்! ஜெ.மரணம் மீது விசாரணை!

560
0
SHARE
Ad

panneer selvam-

சென்னை – சசிகலாவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் நேற்று முதல் குண்டைத் தூக்கிப் போட்டவர் பி.எச்.பாண்டியன். அதன் பின்னர்தான், நேற்றிரவு ஓ.பன்னீர் செல்வம் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புயலெனப் புறப்பட்டிருக்கிறார்.

இன்று பத்திரிக்கையாளர்களை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தபோது அங்கு வந்து ஓபிஎஸ்-சுடன் இணைந்திருக்கிறார் பி.எச்.பாண்டியன். இதிலிருந்து இவர்கள் இருவரும் இணைந்து சசிகலாவுக்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்திருக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.