Home Featured நாடு மலேசியப் பூப்பந்தாட்ட சங்கத்திலிருந்து விலக லீ சொங் வெய் முடிவு!

மலேசியப் பூப்பந்தாட்ட சங்கத்திலிருந்து விலக லீ சொங் வெய் முடிவு!

817
0
SHARE
Ad

lee chong weiகோலாலம்பூர் – உலகப் புகழ் பெற்ற மலேசியப் பூம்பந்தாட்ட வீரர் டத்தோ லீ சோங் வெய், மலேசிய பூப்பந்து சங்கத்திலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த மாதம் இங்கிலாந்து நடைபெற இருந்த பூம்பந்தாட்ட போட்டியில் காயம் காரணமாக அவர் பங்கேற்க முடியாது என்று பூப்பந்து சங்கம் அறிவித்திருப்பதால், கோபமடைந்த லீ சோங் வெய், இம்முடிவை எடுத்திருக்கிறார்.

புக்கிட் கியாராவில் உள்ள புதிய பயிற்சி மையத்தில், கடந்த வாரம் தான் காயமடைந்ததற்குக் காரணம், அங்கிருந்த வழுக்கும் தன்மை கொண்ட கால் விரிப்புகள் தான் என லீ சோங் வெய் குற்றம் சாட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“எனது பயிற்சியாளர் ஹென்ட்ராவான், என்னை அமைதியாக இருக்கும் படிக் கூறியதால் தான் இத்தனை நாட்கள் இவ்விவகாரம் குறித்து மௌனம் காத்தேன். ஆனால் இப்போது எனது அமைதியை இழந்துவிட்டேன். நான் ஆத்திரத்தில் இருக்கிறேன். ஒருவேளை தீர்வு கிடைக்கவில்லை என்றால், நான் சங்கத்திலிருந்து விலகுவேன்” என்று லீ சோங் வெய் கூறியிருக்கிறார்.

கீழே விழுந்த லீ சோங் வெய்யின் இடது முட்டியில் சிறிய அளவிலான உள்காயம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.