Home Featured தமிழ் நாடு பன்னீர் செல்வத்துக்கு கமலஹாசன் ஆதரவு

பன்னீர் செல்வத்துக்கு கமலஹாசன் ஆதரவு

725
0
SHARE
Ad

Kamalhassan

சென்னை – தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து, பலரும் மௌனம் காத்து வரும் வேளையில், குறிப்பாக திரையுலகினர் தலையிடாமல் ஒதுங்கி இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிகர் கமலஹாசன் மட்டும் துணிச்சலுடன் தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்.

தனது டுவிட்டர் தளத்தில் சசிகலா முதல்வராகத் தேர்வு பெற்றது குறித்து கவிதை எழுதி வெளியிட்ட கமல், தொடர்ந்து ‘இந்தியா டுடே’ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பன்னீர் செல்வம், சசிகலா இருவர் மீதிலும் தனக்கு சில அவநம்பிக்கைகள் இருக்கின்றன என்றாலும், தான் திறன் அற்றவர் அல்ல என்பதை பன்னீர் செல்வம் தனது செயல்களால் நிரூபித்திருக்கின்றார் எனவே அவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

தாங்கள் அரசியலில் குதிப்பீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், நான் தேர்தல் நடக்கும்போது எனது விரலில் ஒரு கரும்புள்ளி வைத்து என்னைக் கறையாக்கிக் கொள்ள மட்டுமே இதுவரை அனுமதித்திருக்கிறேன். அதற்கு மேலும் என்னைக் கறையாக்கிக் கொள்ள நான் எண்ணக் கொண்டிருக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.