Home Featured நாடு சிகாமாட் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா 2017

சிகாமாட் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா 2017

934
0
SHARE
Ad

Subramaniamசிகாமாட் – நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 11)  சிகாமாட் தாமான் டேசா இந்தியா வளாகத்தில் சுகாதார அமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா மிக விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.

முழுக்க முழுக்க தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அடிப்படையில் நடைபெறும் இவ்விழா மாலை 4.00 மணி அளவில் தாமான் டேசா இந்தியா வளாகத்தில் கோலாகல ஊர்வலத்துடன் தொடங்கவிருக்கின்றது. தாமான் டேசா இந்தியா குடியிருப்புப் பகுதியில் ஏறக்குறைய 50 இந்தியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவ்வகையில், அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் என நாதஸ்வர மேளத்தாளத்துடன் தாமானில்  இருக்கக்கூடிய 50 இந்தியக் குடும்பங்கள் வீட்டிற்கும் ஊர்வலமாக வருகை தருவார். இந்த ஊர்வலத்தின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பிடி அளவு அரிசி அமைச்சரிடம் வழங்கப்படும்.

ஊர்கூடி வைக்கும் பொங்கல்

#TamilSchoolmychoice

ஏறக்குறைய 2 மணி நேரம் அளவில் நடைபெறும் ஊர்வலத்திற்குப் பின் ஏறத்தாழ மாலை 6.00 மணி அளவில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வழங்கப்பட்ட அரிசியைக் கொண்டு ஒரே பொங்கலாக வைக்கப்படும். மேலும், கரும்பு சாப்பிடுதல், உறி அடித்தல், தோரணம் பின்னுதல், சரம் பின்னுதல், கோலப் போட்டி, வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பண்பாட்டு ஆடை அலங்கார அணிவகுப்பு, சேலை அலங்காரம், கிராமிய நடனம், கும்மி அடித்தல் என தமிழர்களின் பண்பாட்டு மரபுகளைக் கட்டிக் காக்கும் வகையில் பல்வேறு போட்டி விளையாட்டுகளும் நடைபெறும்.

புதிய சிந்தனையிலும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அடிப்படையிலும் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்குச் சிகாமாட் வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரப் பொதுமக்கள் என அனைவரும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு கேட்டுக் கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து மேல் விவரங்கள் பெறவும் போட்டி விளையாட்டுகளில் பங்கு பெறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த வட்டாரப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திரு. இரவி – 0127585623 (ஜெமிந்தா)
திரு.ஜேம்ஸ் – 0136957518 (கிம்மாஸ் பாரு)
திரு.காசிநாதன் – 0177757216 (பூலோ காசாப்)
திருமதி.சரோஜினி – 01136575845 (தாமான் யாயாசான்)
திரு.யாகசீலன் – 0167702034 (பத்து அன்னம்)
திரு.செல்வபெருமாள் – 0137737127 (சிகாமாட்)