புதுடெல்லி – தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்திருந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வரவுள்ள நிலையில், அது சசிகலாவிற்கு எதிராக அமைந்துவிட்டால், அவர் மீண்டும் சிறை செல்ல நேரிடும். அப்போது அவர் முதல்வர் பதவியில் இருப்பாரானால், தமிழகத்தில் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தீர்ப்பு வரும் வரை சசிகலா முதல்வராக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.