Home Featured வணிகம் ஏர் ஆசியா எக்ஸ் சலுகை விலை: கேஎல் – ஹவாய் பயணம் 499 ரிங்கிட் மட்டுமே!

ஏர் ஆசியா எக்ஸ் சலுகை விலை: கேஎல் – ஹவாய் பயணம் 499 ரிங்கிட் மட்டுமே!

894
0
SHARE
Ad

AirAsia-x-in-flightஒசாகா – கோலாலம்பூரில் இருந்து ஹாவாயின் ஹோனோலுலுவுக்கு, ஒசாகா வழியாக வாரத்திற்கு 4 விமானச் சேவைகள் வழங்குவதாக ஏர் ஆசியா எக்ஸ் அறிவித்திருக்கிறது.

இச்சேவை வரும் ஜூன் 28-ம் தேதி முதல் துவங்குகிறது.

நாளை பிப்ரவரி 11-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை 499 ரிங்கிட் மட்டுமே என்றும், பயணக்காலம் ஜுன் 28 முதல் 2018 பிப்ரவரி 6 வரையில் என்றும் ஏர் ஆசியா எக்ஸ் அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

பிரீமியம் பிளாட்பெட்டின் விலை 2,999 ரிங்கிட்டிலிருந்து தொடங்குகிறது.

அமெரிக்காவிற்குப் பறப்பதற்கு ஏர் ஆசியா எக்ஸ் கூட்டரசு வான்போக்குவரத்து ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றுவிட்டதைத் தொடர்ந்து இந்தப் புதிய சேவை துவங்குவது குறிப்பிடத்தக்கது.