Home One Line P2 ஹவாய்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அறுவரின் உடல் மீட்பு!

ஹவாய்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அறுவரின் உடல் மீட்பு!

868
0
SHARE
Ad

மாஸ்காவ்: ஹவாய் தீவான கவாய் மீது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஏழு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்பு பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை ஹெலிகாப்டர் கவாய் தீவின் ஒரு சுற்றுப்பயணத்திலிருந்து ஒரு விமானி மற்றும் ஆறு பயணிகளுடன் சரியான நேரத்தில் திரும்பத் தவறியதை அடுத்து தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் மீட்புக் குழுக்களால் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கவாய் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆறு சடலங்களை மீட்டெடுத்துள்ளதாகவும், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் பற்றிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.