ஹவாய், ஏப்ரல் 22 – அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் இருந்து ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ள பகுதியில் அமர்ந்தவாறு 16 வயது சிறுவன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான்.
அவனது பெயர் ஜான் ஜோஸ் (வயது 16) ஹவாயின் மோயி விமானநிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்த சிறுவன் வந்ததாக மத்திய புலனாய்வு துறை (FBI) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் என்ன அதிசயம் என்றால் பசிபிக் பெருங்கடலை இந்த விமானம் கடந்துவந்துள்ளது. உறையும் குளிரில்.( -62 செல்சிய்யஸ் குளீர் ) கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 .30 மணி நேரம் இந்த சிறுவன் பயணம் செய்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பயணத்தில் வரும் வழியில் போதியதளவு சுவாசக் காற்று (ஆக்ஸிஜன்) இல்லாமல் மயங்கியிருந்த அந்தப் பையனுக்கு விமானம் தரையிறங்கும்போது தான் நினைவு திரும்பியுள்ளது.
அவன் உயிருடன் இருக்கிறான் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்று ஹவாயி ஏர்லைன்ஸ் விமான சேவை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார், இது குறித்து ஜான் ஜோஸ்சிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்