Home One Line P1 ஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது!

ஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது!

1133
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடன்/ பற்று அட்டை மற்றும் இணையம் வழி பணம் செலுத்தும் முறையில் அடிப்படை கட்டணங்களிலிருந்து தனித்தனியாக வசூலித்ததற்காக ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் ஆகிய இரு நிருவனங்களுக்கு மலேசியன் ஏவியேஷன் கமிஷன் (மாவ்காம்) 200,000 அபராதம் விதித்துள்ளது.

இவ்விரு விமான நிறுவனங்களும் வசூலிக்கும் கட்டணம், மலேசிய விமான நுகர்வோர் பாதுகாப்பு குறியீடு 2016 (எம்ஏசிபிசி)- க்கு முரணானது என்று மாவ்காம் ஓர் அறிக்கையில் இன்று செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

எம்ஏசிபிசி கடந்த 20116-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் இது நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் மாவ்காமின் நோக்கத்திற்கு ஏற்ப வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

விமான சேவை வழங்குநர்களின் நுகர்வோர் மீதான கடமைகள் மற்றும் விமானப் பயணிகளுக்கு, அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களை எம்ஏசிபிசி வழங்குகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து, எம்ஏசிபிசியின் புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதை மாவ்காம் கண்காணித்து வருவதாகக் கூறியது.

ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவை எம்ஏசிபிசியின் துணைப் பத்தி 3 (2) மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது விமானத்தின் இறுதி விலையை முழுமையாக வெளிப்படுத்தும் அங்கம். ஒரு முரண்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிய செயல்முறையின் ஒரு பகுதியாக, மாவ்காம் இரு விமான நிறுவனங்களுக்கும் காரணக் கடிதங்களை வெளியிட்டது மற்றும் அபராதங்களின் அளவைக் குறைப்பதற்கான காரணிகளை வழங்க விமான நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது.” என்று அது குறிப்பிட்டுள்ளது.