Home One Line P1 18 இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசுப்பாடு குறியீட்டைக் கொண்டுள்ளது!

18 இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசுப்பாடு குறியீட்டைக் கொண்டுள்ளது!

718
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொத்தமாக 18 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) வாசிப்பைப் பதிவுசெய்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், எந்தப் பகுதியும் மதியம் 12 மணி வரையிலும் ஆபாத்தான ஏபிஐ அளவீடுகளைப் பதிவு செய்யவில்லை.

அதிக ஏபிஐ கொண்ட பகுதியாக ரோம்பின் (194), அதைத் தொடர்ந்து ஸ்ரீ அமான் (190) மற்றும் பத்து மூடா (162) பதிவாகி உள்ளது.

ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவு செய்த பிற பகுதிகளாக ஜோஹான் செத்தியா கிள்ளான் (161); செராஸ் (155); நீலாய் (148); பெட்டாலிங் ஜெயா (144); புத்ராஜெயா (142); ஷா அலாம் (134); பந்திங் (123); சிரம்பான் (119); கிள்ளான் (118); தங்காக் (113); புக்கிட் ரம்பாய் (104); அலோர் காஜா (103), போர்ட் டிக்சன் (103) பதிவிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

சமீபத்திய ஏபிஐ நிலைகளைக் கண்டறிய மக்கள் http://apims.doe.gov.my என்ற வலைத்தளத்தைப் பார்க்கலாம்.