Home Featured நாடு “இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்” – சாஹிட் உறுதி

“இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்” – சாஹிட் உறுதி

697
0
SHARE
Ad

thaipusam-2017-zahid-subra-waving

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றிய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தாம் நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவற்றுக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

சாஹிட் உரைக்கு முன்னதாக உரையாற்றிய மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைகள், பத்துமலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது, அங்கு இந்தியர் கலாச்சார மையம் ஒன்றை அமைப்பது என்பது போல பல விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.