Home Featured கலையுலகம் மார்வெல் திரைப்படத்தில் நடிக்கப்போகும் பிரபல மலேசிய நடிகை!

மார்வெல் திரைப்படத்தில் நடிக்கப்போகும் பிரபல மலேசிய நடிகை!

789
0
SHARE
Ad

Marvel filmsகோலாலம்பூர் – ‘அப்பளம்’ என்ற மலேசியத் திரைப்படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஈப்போவைச் சேர்ந்தவரான நடிகை ராஜா இல்யா, உலகப் புகழ்பெற்ற மார்வெல் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

‘சோல்மேட் ஹிங்கா ஜன்னா’ என்ற புதிய மலாய் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இத்தகவலை ராஜா இல்யா வெளியிட்டதாக ‘ஸ்டார்2.காம்’ கூறுகின்றது.

Raja ilyaமார்வெல் நிறுவனத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் துவங்கவுள்ளதாக ராஜா இல்யா தெரிவித்திருக்கிறார். எனினும், அத்திரைப்படத்தின் மற்ற விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice