Home Featured தமிழ் நாடு கூவாத்தூரில் சசிகலா! தங்கும் விடுதிகளில் காவல் துறை சோதனை!

கூவாத்தூரில் சசிகலா! தங்கும் விடுதிகளில் காவல் துறை சோதனை!

789
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் மாலை 6.30 மணி நிலவரம்) அதிரடியாகக் களத்தில் இறங்கும் வண்ணம், “பொறுமை காப்போம்! உரிய முடிவு வராவிட்டால் செய்ய வேண்டியதைச் செய்வோம்” என பகிரங்கமாகச் சூளுரைத்த சசிகலா, அதிரடியாக, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள, கூவாத்தூரிலுள்ள கோல்டன் பே உல்லாச விடுதியை சென்றடைந்துள்ளார்.

sasikala-meeting-governorகடந்த வியாழக்கிழமை இரவு ஆளுநரை சசிகலா சந்தித்தபோது…

இது தொடர்பான மேலும் சில அண்மையச் செய்திகள் பின்வருமாறு:-

  • இதற்கிடையில் சென்னையைச் சுற்றியுள்ள முக்கியத் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் பட்டியலைத் தரவேண்டும் என தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களிடம் காவல் துறையினர் கோரியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் மீது விசாரணைகள் முடுக்கி விடப்படவும் காவல் துறை ஆணையிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கோல்டன் பே தங்கும் விடுதியில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் சசிகலா தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • புதிய அவைத் தலைவர் செங்கோட்டையன், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, நவநீதிகிருஷ்ணன் ஆகியோரும் சசிகலாவுடன் சென்றுள்ளனர்.
  • கோல்டன் பே விடுதிக்கு வெளியே குழுமியுள்ள பத்திரிக்கையாளர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
    இதற்கிடையில் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக சசிகலா ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பன்னீர் செல்வம் பதவி விலகி ஏழு நாட்கள் கடந்த பின்னரும் இன்னும் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதைச் சுட்டிக் காட்டி, உடனடியாக தன்னைப் புதிய முதல்வராக அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு