Home Featured கலையுலகம் மீண்டும் நிர்வாணப் படங்களுக்கு மாறிய ‘பிளேபாய்’

மீண்டும் நிர்வாணப் படங்களுக்கு மாறிய ‘பிளேபாய்’

820
0
SHARE
Ad

playboy-logoநியூயார்க் – கடந்த ஓராண்டாக நிர்வாணப் படங்களுக்கு முழுக்குப் போட்டிருந்த அமெரிக்காவின் பிரபல மாத இதழான ‘பிளேபாய்’, வரும் மார்ச்/ ஏப்ரல் 2017 மாத இதழில் இருந்து மீண்டும் நிர்வாணப் படங்களை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது.

மார்ச் மாத அட்டைப் படமாக எலிசபெத் எலாம் என்ற நடிகையின் அரை நிர்வாணப் படத்தை வெளியிட்டிருக்கும் பிளேபாய், ‘நிர்வாணம் என்பது இயல்பான ஒன்று தான்’ என்றும் தலைப்பிட்டிருக்கிறது.

Elizabeth Elam(மார்ச் மாத அட்டைப் படத்தை அலங்கரிக்கப் போகும் அழகி எலிசபெத் எலாம்)

#TamilSchoolmychoice

“அட்டைப்படங்களில் நிர்வாணத்தைக் காட்டுவது என்றுமே பிரச்சினை இல்லை. காரணம் நிர்வாணம் என்றுமே பிரச்சினை இல்லாதது என்பதை நான் முதலில் ஒப்புக் கொள்கிறேன். இன்று நாங்கள் எங்களது அடையாளத்தை மீண்டும் எடுத்திருக்கிறோம். நாங்கள் யார் என்று எங்களையே மீட்டெடுக்கிறோம்” என்று பிளேபாய் மாத இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னரின் மகன் கூப்பர் ஹெப்னர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இனி தாங்கள் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதில்லை என அறிவித்த பிளேபாய், இறுதியாக, ஜனவரி 2016 மாத இதழில், நடிகை பமீலா ஆண்டர்சனின் நிர்வாணப் படத்தை வெளியிட்டு அதோடு நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.