இந்நிலையில், அங்கு சசிகலா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு, வெளி ஆட்கள் சிலரும் இருப்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றியிருக்கிறது.
மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.இதனால் அப்பகுதிவாசிகளிடையே, என்ன ஆகுமோ? என்ற பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடு தான் இருக்கிறது. அவரின் வழிகாட்டுதல் படி நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி” என்று தெரிவித்தார்.
Comments