Home Featured நாடு முஸ்லிம்கள் அன்பர் தினம் கொண்டாடக் கூடாது – கூட்டரசு முஃப்தி கருத்து!

முஸ்லிம்கள் அன்பர் தினம் கொண்டாடக் கூடாது – கூட்டரசு முஃப்தி கருத்து!

670
0
SHARE
Ad

Zulkifli Mohamad al-Bakriகோலாலம்பூர் – சமூகத்தில் கேடுகளை விளைவிக்கும் அன்பர் தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடக் கூடாது என கூட்டரசுப் பிரதேச முஃப்தி சுல்கிப்ளி மொகமட் அல் பக்ரி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அரசாங்கம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அரசாங்கப் புள்ளி விவரப்படி, கடந்த 2000 – 2015-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 526 சிசுக்கள் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன. 2012 – 2015-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 16,270 பருவ வயதுப் பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள் என்று சுல்கிப்ளி குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மேலும், 2005 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில், திருமண பந்தம் இல்லாமலேயே, 532,158 குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டிருக்கின்றன. சுகாதார அமைச்சின் அறிக்கையின் படி, 13,831 இளம் வயதுப் பெண்களில் 28.8 பேர் திருமண பந்தம் இல்லாமலேயே கருவைச் சுமந்து கொண்டு இருக்கின்றனர். எனவே நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, இளைஞர்களிடையே முறையற்ற செயல்களை இந்த அன்பர் தினம் தூண்டி விடுகின்றது” என்றும் சுல்கிப்ளி தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமைப் பொறுத்தவரையில், பெற்றோர், கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், மனிதர்களிடத்தில் சமூக, மத வரம்புகளுக்கு உட்பட்டு அன்பு செலுத்துவதற்கு சிறப்பு நாளெல்லாம் கிடையாது. எல்லா நாளிலும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகின்றது என்றும் சுல்கிப்ளி கூறியிருக்கிறார்.