Home Featured தமிழ் நாடு மாலையில் ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

மாலையில் ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

708
0
SHARE
Ad

Governarசென்னை – அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்கிறார்.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தான் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கவிருக்கும் அவர், ஆட்சி உரிமம் கோருவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice