Home Featured உலகம் வடகொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் கொல்லப்பட்டார்!

வடகொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் கொல்லப்பட்டார்!

1102
0
SHARE
Ad

30-kim-jong-un-600கோலாலம்பூர் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் மற்றும் வடகொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிம் ஜோங் நாம் என்ற அவர், நேற்று திங்கட்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில், இரு வடகொரிய நாட்டவர்களால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடையாளம் தெரியாத வடகொரிய நபர் ஒருவர், விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்ததாக மலேசியக் காவல்துறையும் தகவல் தெரிவித்திருப்பதாக ‘ரைட்டர்ஸ்’ கூறுகின்றது.