Home Featured நாடு கிம் ஜோங் நம் கொலை: ‘அந்த இரு பெண்களும் இந்நேரம் இறந்திருப்பார்கள்’ – அறிக்கை தகவல்!

கிம் ஜோங் நம் கொலை: ‘அந்த இரு பெண்களும் இந்நேரம் இறந்திருப்பார்கள்’ – அறிக்கை தகவல்!

548
0
SHARE
Ad

Kim jong namகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்கைக் கொலை செய்ததாக நம்பப்படும் அந்த இரு பெண்களும் இந்நேரம் மரணமடைந்திருக்கலாம் என ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் கூறுகின்றது.

“அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக, தகவல்கள் கிடைத்துள்ளன” என்று ஜப்பான் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பதாக அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

எனினும், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

காரணம், வடகொரிய கூலிப்படைகளைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அப்பெண்கள், இது போன்ற படுகொலைகளை நடத்துவதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் என்றும், அதன்படி, தங்களது வேலை முடிந்துவிட்டால் உடனடியாக அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறுகின்றது.