Home Featured நாடு கிம் ஜோங் நம் கொலை: இரண்டாவது பெண்ணும் பிடிபட்டார்!

கிம் ஜோங் நம் கொலை: இரண்டாவது பெண்ணும் பிடிபட்டார்!

597
0
SHARE
Ad

Kim jong nam murderகோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களில் நேற்று புதன்கிழமை ஒருவர் கைதானதை அடுத்து, இன்று வியாழக்கிழமை மற்றொரு பெண்ணையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பெர்னாமா இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என காவல்துறை கூறுகின்றது.