Home Featured நாடு கிம் ஜோங் நம் கொலை: நான்காவது நபர் கைது!

கிம் ஜோங் நம் கொலை: நான்காவது நபர் கைது!

588
0
SHARE
Ad

jong-nam-afp2கோலாலம்பூர் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் படுகொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்காவது நபரை நேற்று வெள்ளிக்கிழமை மலேசியக் காவல்துறை கைது செய்தது.

ஜாலான் கூச்சாய் லாமாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், நேற்று இரவு 9 மணியளவில் 47 வயதான கொரிய நாட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரைக் காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.