Home Featured தொழில் நுட்பம் பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்

பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்

1405
0
SHARE
Ad

தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழலில், அதிக அளவு தமிழ் மின்னுரையாடல்கள் நடந்து வருகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அந்த உரையாடல்களில் செல்லினம் பெரிய பங்கை ஆற்றுகின்றது என்பதை, எங்களுக்கு வரும் செய்திகளும், விளக்கங்களைக் கோரி வரும் மின்னஞ்சல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழின் பயன்பாடு அதிகரிக்கின்றது என்பது எங்களுக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இதைத்தவிர செல்லினத்திற்கும், எந்த நாட்டு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறோம்!

சரி, இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

“பண்ணீர்’ என்னும் பெயரை, அஞ்சல் விசைமுகத்தைக் கொண்டு p a n n i i r என்று எழுதினால், ‘பன்னீர்’ என்றே தோன்றுகிறது, ஏன் பண்ணீர் என்று வரவில்லை?”.

#TamilSchoolmychoice

இதுவே எங்களுக்கு வருகின்ற செய்தி. சரியான எழுத்துகளைப் பெறுவதற்கு p a N N i i r என்று எழுத வேண்டும். அதாவது, மேல்நிலை (upper case) N பயன் படுத்த வேண்டும்.

sellinam-Panniir-Prediction

பன்னீர்  என்னும் சொல் தமிழில் உண்டு. இந்தச் சொல் செல்லினத்தின் சொற்பட்டியலிலும் உண்டு. பண்ணீர் என்னும் சொல், சொற்பட்டியலில் இல்லாததால், வற்புறுத்தி பண்ணீர் என்று எழுதினாலும், பன்னீர் என்னும் சொல்லையே செல்லினம் பரிந்துரைக்கின்றது.

பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டும் சொல் சரியாக எழுதப்பட்டிருந்தால் வெளி கட்டத்தை (space bar) அழுத்தினால் போதும். அந்தச் சொல்லே செய்தியில் சேரும். பரிந்துரைகள் நிராகரிக்கப்படும். தொடர்ந்து அதே சொல்லை நீங்கள் அவ்வாறே எழுதிவந்தால், அந்தச் சொல் இயல்பாகவே பட்டியலில் சேர்க்கப்படும். அதன்பின், ஓரிரு எழுத்துகளை எழுதினாலே முழுச் சொல்லும் பரிந்துரையிலும் தோன்றும். விரைவாக எழுதவும் உதவும்.

இந்த வசதி உங்களிடம் உள்ள செல்லினத்திலேயே உள்ளது. புதிய பதிகை எதனையும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.

விரைவாகத் தட்டெழுத மேலும் சில வசதிகள்

செல்லினத்தின் சொற்பட்டியலில் நாம் அடிக்கடிப் பயன் படுத்தும் சொற்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இருந்தே பரிந்துரைகள் வருகின்றன.  பதிவிறக்க அளவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சொற்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

இருந்தாலும், பட்டியலில் இல்லாதச் சொற்களை, உங்கள் சொந்தச் சொற்பட்டியலில் நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். இதைப்பற்றி விரிவான கட்டுரை ஒன்றை, ‘புதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!‘ என்னும் தலைப்பில், ஏற்கனவே செல்லினத்தில் வெளியிட்டிருந்தோம்.

மேலும், நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் சொற்களுக்குக் குறுக்கெழுத்துகளைச் சேர்த்துக் கொள்ளலாம். குறுக்கொழுத்துகள் விரைவாகத் தட்டெழுத்திட பெரிதும் உதவும். இதனை விளக்கும் கட்டுரைகள்: ‘விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து‘, ‘தமிழில் சுருக்கு வழி தட்டச்சு செய்வது எப்படி?’.

இவை எளிதாகவும் விரைவாகவும் தமிழில் தட்டெழுத உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்! மேலும் விளக்கங்கள் வேண்டின், தயங்காமல் கேளுங்கள்.

-நன்றி : செல்லினம்