குறிப்பாக, நேற்று திங்கட்கிழமை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவைச் சந்தித்ததாகக் கூறப்படுகின்றது.
பெங்களூரு சிறையில் இருப்பது சசிகலாவின் உயிருக்கு ஆபத்து, எனவே அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கர்நாடக அரசை, அதிமுக அணுகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், கர்நாடக புலனாய்வுத் துறை நடத்திய ஆய்வில், சசிகலா பாதுகாப்பாக தான் இருக்கிறார் என்றும், அவரது உயிருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
எனவே, சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேறு விதமான வழிகளிலும் அதிமுக தரப்பினர் முயற்சிகள் செய்து வருவதாகவும், விரைவில் கர்நாடக அரசை அவர்களின் மனுவை பரிசீலனை செய்யும் என்றும் அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன.