Home Featured உலகம் மெல்பர்ன் நகரில் சிறிய இரக விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி!

மெல்பர்ன் நகரில் சிறிய இரக விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி!

774
0
SHARE
Ad

Melbourneமெல்பெர்ன் – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, சிறிய இரக தனியார் விமானம் ஒன்று வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், 5 பேர் உயிரிழந்தனர்.

எசண்டான் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட அவ்விமானம், வானில் பறந்த சில நொடிகளிலேயே இயந்திர செயலிழப்பு ஏற்பட்டு, விமான நிலையத்தின் அருகில் இருந்த வணிக வளாகத்தில் மேல் விழுந்து நொறுங்கியது.

ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், அதிருஷ்டவசமாக வணிக வளாகத்தில் அதிக மக்கள் இல்லாத காரணத்தால், அங்கு உயிரிழப்புகள் இல்லை என மெல்பர்ன் நகர காவல்துறை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், விமானத்தில் இருந்த 5 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று காவல்துறை உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.