Home Featured நாடு மீண்டும் ஒரு பயங்கரம்: பினாங்கில் மர்ம நபர்களால் பெண் சுட்டுக் கொலை!

மீண்டும் ஒரு பயங்கரம்: பினாங்கில் மர்ம நபர்களால் பெண் சுட்டுக் கொலை!

732
0
SHARE
Ad

Penangஜார்ஜ் டவுன் – பினாங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ரூபி போ எய் என்ற 49 வயதான பெண், தனது வழக்கமான அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, தனது பிஎம்டபிள்யூ காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஜாலான் புக்கிட் கம்பீர் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அலுவலகத்தில் இருந்து லீ வெளியேறிய 5 நிமிடத்தில் இச்சம்பவம் நடத்தப்பட்டிருக்கிறது.

அவரது காரின் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்தவன் லீ அமர்ந்திருந்த ஓட்டுநர் இருக்கையை நோக்கி கைத்துப்பாக்கியால் 10 முறை சுட்டிருக்கிறான்.

#TamilSchoolmychoice

இதில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே லீ மரணமடைந்தார்.

லீ அலுவலகத்தில் இருந்து வெளியேறும் வரை, கொலையாளிகள் காந்திருந்திருக்கலாம் என்று பினாங்கு காவல்துறை கூறுகின்றது. தற்போது கொலையாளிகளைக் கண்டறிய காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.