Home Featured இந்தியா “ஸ்கைப் மூலம் பதிலளிக்கிறேன்” – இந்திய அமலாக்கப் பிரிவுக்கு சாகிர் நாயக் பதில்!

“ஸ்கைப் மூலம் பதிலளிக்கிறேன்” – இந்திய அமலாக்கப் பிரிவுக்கு சாகிர் நாயக் பதில்!

844
0
SHARE
Ad

zakir naik -

மும்பை – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயக் (படம்) மீது இந்திய அமலாக்கப் பிரிவினர் தொடுத்துள்ள வழக்குகளுக்கு ‘ஸ்கைப்’ போன்ற மின்னூடகங்களின் வழி பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாக சாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர் மஹேஷ் முல் என்பவர் மூலம் சாகிர் நாயக் அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சாகிர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியம் என்ற அமைப்பின் நிறுவனராவார். இந்த இயக்கம் தற்போது 5 ஆண்டுகால தடையை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த வாரம், இந்திய அமலாக்கப் பிரிவினர் அமிர் கஸ்டார் என்ற சாகிர் நாயக்கின் நெருங்கிய உதவியாளரை பண இருட்டடிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தனர்.

இந்தியாவில் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்ட சாகிர் நாயக் மலேசியாவில் சுதந்திரமாக நடமாடி வருவதோடு, இஸ்லாமியப் பிரச்சாரக் கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றார்.