Home Featured நாடு ஜோங் நம் கொலை: பிரபல வணிக வளாகங்களில் ஒத்திகை பார்த்த கொலையாளிகள்!

ஜோங் நம் கொலை: பிரபல வணிக வளாகங்களில் ஒத்திகை பார்த்த கொலையாளிகள்!

588
0
SHARE
Ad

KimJongNamகோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மை விஷம் பாய்ச்சிக் கொலை செய்த இரு பெண்களும், கேஎல்சிசி, பெவிலியன் என கோலாலம்பூரில் அமைந்திருக்கும் முக்கிய வணிக வளாகங்களில், அதனை பலமுறை ஒத்திகை பார்த்திருக்கும் அதிர்ச்சித் தகவலை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வெளியிட்டிருக்கிறார்.

கொலை நடப்பதற்கு முந்தைய நாள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல், அந்த இரு பெண்களும், மறுநாள் நடத்தப்போகும் கொலையை கச்சிதமாக நடத்துவதற்கான பயிற்சியையும் செய்து பார்த்திருகின்றனர் என்றும் காலிட் தெரிவித்தார்.

வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் (வயது 28), இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 25) என்ற அந்த இரு பெண்களுக்கும் தாங்கள் பயன்படுத்துவது விஷம் தான் என்பது நன்கு தெரிந்தே இருந்திருக்கிறது என்றும் காலிட் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கையுறையில் விஷத்தைப் பூசி அதனை ஜோங் நம்மின் முகத்தில் தேய்ப்பது தான் அவர்களின் திட்டம் என்று குறிப்பிட்ட காலிட், அதனை முதலில் செய்தது இந்தோனிசியப் பெண் என்றும், அவரை அடுத்து வியட்னாம் பெண்ணும் விஷத்தைத் தேய்த்தார் என்றும் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் தெரிவித்தார்.