Home Featured கலையுலகம் “இதை வெளியே சொல்ல விரும்பவில்லை” – பாடகி சுசித்ரா தனுஷ் மீது திடீர் குற்றச்சாட்டு!

“இதை வெளியே சொல்ல விரும்பவில்லை” – பாடகி சுசித்ரா தனுஷ் மீது திடீர் குற்றச்சாட்டு!

1206
0
SHARE
Ad

suchi7சென்னை – கடந்த இரண்டு நாட்களாக பாடகியும், நடிகையுமான சுசித்ராவின் டுவிட்டர் பதிவுகள், அவரது பக்கத்தைப் பின்பற்றி வருபவர்களுக்கு மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணான பதிவுகளை சுசித்ரா வெளியிட்டுவந்தார். குறிப்பாக அதில் எல்லாவற்றிலும் நடிகர் தனுஷை அதீதமாகப் புகழ்வதுமாகவும், மறைமுகமாக இகழ்வதுமாகவும் அப்பதிவுகள் இருந்தன.  அதுமட்டுமின்றி சிம்பு தான் உண்மையான வெற்றியாளர் என்றும் சுசித்ரா குறிப்பிட்டிருந்தார்.

Suchi1அதன் பிறகு, கோயம்பத்தூரில் அமைந்திருக்கும் சத்குரு பற்றியும் அவரது டுவிட்டர் பதிவுகளில் மறைமுகமாகப் பேசினார்.

#TamilSchoolmychoice

இதையெல்லாம் படித்த அவரது ரசிகர்களுக்கு, அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்களோ என்ற எண்ணமே நிலவியது.

ஆனால், சுசித்ராவின் அடுத்தடுத்த பதிவுகள் அப்படி யாரும் ஹேக் செய்யவில்லை என்று கூறியது.

காயம்பட்ட தனது கையைப் படம் பிடித்துப் போட்ட சுசி. “இதை வெளியே சொல்ல விரும்பவில்லை தனுஷ், நான் எப்போதுமே நியாயமான விளையாட்டை தான் விளையாடுவேன். ஆனால் சத்குரு குழப்பாமல் இருக்கமாட்டார். எனவே போர். அப்படி தான்” என்றும் சுசித்ரா குறிப்பிட்டிருந்தார்.

என்ன தான் பிரச்சினை? என்று அறிந்து கொள்ள, செய்தியாளர்கள், சுசித்ராவின் கணவர் நடிகர் கார்த்திக்கை அழைக்க, அவரோ அது சுசித்ராவின் தனிப்பட்ட பிரச்சினை நான் இதை எப்படி பேச முடியும்?” என்று ஒதுங்கிக் கொண்டதாக ஊடகங்கள் சில தெரிவித்திருக்கின்றன.

suchiஇதனிடையே, அவரைப் பின்பற்றி வரும் ஒருவர், “சுசித்ரா மீண்டும் ஒதுக்கப்பட்டு உதவியின்றி தவிக்கிறார். கோலிவிட்டில் நம்பர் 1 அவர், வாருங்கள் உதவுவோம்” என பிரதமர் மோடி உட்பட பலரையும் இணைத்து பதிவு செய்திருக்கிறார். அதனை மறுடுவீட் செய்திருக்கும் சுசித்ரா, “இது முற்றிலும் உண்மை. நான் தாக்கப்பட்டேன். யாரும் எனக்கு உதவிக்கு வரக்கூடாது எனத் தடுக்கப்பட்டிருக்கிறேன். நன்றி சகோ” என்று பதிலளித்திருக்கிறார்.

எனவே இந்த இந்த விவகாரம் இன்னும் குழப்பாகவே தான் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்க சில முன்னணி ஊடகங்கள் சுசித்ராவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும், அவர் பதிலளிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.