Home உலகம் மனித உரிமை அமைப்புகள் சாடல்

மனித உரிமை அமைப்புகள் சாடல்

601
0
SHARE
Ad

united-nationsலண்டன், மார்ச்.22- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனித உரிமை அமைப்புகள் குறை கூறியுள்ளன.

இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து லண்டனில் உள்ள ஆம்னெஸ்டி மனித உரிமைகளுக்கான அமைப்பின் பிரதிநிதி யோலந்தா பாஸ்டர் கூறியது:-

இலங்கை ராணும் மற்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தாதது கவலை அளிக்கிறது என்றார்.

#TamilSchoolmychoice

இலங்கையில் ஏற்கெனவே நடைபெற்ற, தற்போது நடைபெறும் மனித உரிமை மீறல்களை இத்தீர்மானம் வெளிக்கொணர்ந்துள்ளது. எனினும் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான  சர்வதேச நீதி விசாரணைக்கு வழிகாணாதது வருத்தம் அளிக்கிறது.

அதே வேளையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் மூலம் ஐ.நா. உறுப்பு நாடுகள் இலங்கையின் கடந்த கால தவறுகள் விஷயத்தில் மென்மையாக இருக்க மாட்டோம் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டி உள்ளன.

நியுயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ” இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்த சர்வதேச நீதி விசாரணை தான் ஒரே வழி” எனத் தெரிவித்துள்ளது.