Home Featured கலையுலகம் தகவல் ஊடக மாணவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆனார் டிஎச்ஆர் ஆனந்தா!

தகவல் ஊடக மாணவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆனார் டிஎச்ஆர் ஆனந்தா!

730
0
SHARE
Ad

Aananda1கோலாலம்பூர் – அண்மையில் தகவல் ஊடக மாணவர்களுக்குச் சிறந்த “ரோல் மாடல்” எனும் அங்கீகாரம், டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளரான ஆனந்தாவிற்கு செஜி (SEGi) பல்கலைக்கழகத்தால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட  ‘ரோல் மாடல் டூ மாஸ் காமெர்ஸ் – Role Model To Mass Commers’ வாக்கெடுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆனந்தாவிற்கு வாக்களித்திருக்கின்றனர்.

இது குறித்து டிஎச்ஆர் ராகா ஆனந்தா கூறுகையில், “மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். இனிவரும் காலங்களிலும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டுவேன்,” என்றார்.

#TamilSchoolmychoice

Anandaதற்போது, ஆனந்தா டிஎச்ஆர் ராகவில் காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை ‘‘கலக்கல் காலை’’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த அங்கீகாரம் ஆனந்தாவிற்கு மட்டுமின்றி நம் நாட்டின் உள்ளூர் கலைஞரான புஷ்பா நாராயணுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.