கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த வடகொரிய நாட்டவரான ரி ஜோங் சோல், நாளை வெள்ளிக்கிழமை வடகொரியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ மொகமட் அபாண்டி அலி தெரிவித்தார்.
அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லையென்பதாலும், அவரது இரண்டாவது தடுப்புக் காவல் உத்தரவு நிறைவடைவதாலும் அவர் நாடு கடத்தப்படுவார் என்றும் அபாண்டி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரியை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.