Home அரசியல் அடுத்த பினாங்கு துணை முதல்வராக ராமசாமிக்கு பதில் கர்ப்பால் சிங் மகன் ஜக்டீப்?

அடுத்த பினாங்கு துணை முதல்வராக ராமசாமிக்கு பதில் கர்ப்பால் சிங் மகன் ஜக்டீப்?

713
0
SHARE
Ad

penang-p.ramasamyபினாங்கு, மார்ச்.22- ஜனநாயக கட்சி தலைவர் லிம் கிட் சியாங் 13ஆம் பொதுத் தேர்தலில் தான் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார்.

ஆனால் அவருடைய புதல்வர் பினாங்கு முதல்வராகிய லிம் குவான் எங் தான் போட்டியிடும் தொகுதியை இதுவரை அறிவிக்கவில்லை.

இதனிடையில், பினாங்கு மாநிலத்தில் 13ஆம் பொதுத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய  அரசியல் மாற்றங்கள் நிகழ சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

குறிப்பாக, ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் கொண்டு வந்த திட்டமான ஒரு தலைவருக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் பினாங்கு துணை முதல்வராக  இருக்கும் ராமசாமி நாடாளுமன்றத்தில் மட்டுமே போட்டியிடுவார் என்றும், பிறை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அடுத்த பினாங்கு துணை முதல்வராக ராமசாமி தொடர்ந்து செயல் படமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சி தலைவர் கர்ப்பால் சிங்கின்  புதல்வராகிய ஜக்டீப் சிங் டத்தோ கிராமாட் சட்டமன்றத்தில் போட்டியிட்டு அதன்வழி துணை முதல்வராக ராமசாமிக்கு பதிலாக நியமிக்கப்படுவார் என்று பினாங்கு ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஐ.செ.கவில் உள்ள ராமசாமி ஆதரவாளர்களும் தமிழர் தலைவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.