Home Featured கலையுலகம் தமிழ்த் திரையுலக ஆபாசங்களால் டுவிட்டர் தெறிக்கின்றது!

தமிழ்த் திரையுலக ஆபாசங்களால் டுவிட்டர் தெறிக்கின்றது!

1140
0
SHARE
Ad

suchitra-danush-comboசென்னை – கடந்த சில நாட்களாக தமிழ்ப்பட இரசிகர்கள் அனைவரும் ‘படம்’ பார்க்க திரையரங்குகளுக்கு செல்வதை விட்டு விட்டு, தங்களின் கணினி மற்றும் செல்பேசிகளின் திரைகளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

அந்த அளவுக்கு தமிழ்ப் படவுலக நட்சத்திரங்களின் ஆபாசப் படங்கள், காணொளிகளால் (வீடியோ) தெறித்துக் கிடக்கின்றது டுவிட்டர் தளம். ஆரம்பித்து வைத்த புண்ணியவதி பாடகி சுசித்ரா.

இந்த சர்ச்சையின் கதாநாயகி சுசித்ரா என்றால் கதாநாயகன் தனுஷ்தான்! அவரை மையப்படுத்தியே பல தாக்குதல்கள் தொடர்கின்றன.

#TamilSchoolmychoice

சுசித்ராவின் டுவிட்டர் தளத்தை வேறு யாரோ சட்டவிரோதமாக ஊடுருவி விட்டார்கள் என்ற தகவல்கள் ஒருபுறம்! அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது கணவர் கார்த்திக்கே அதே டுவிட்டரில் காணொளி மூலம் தெரிவிக்கிறார். தனது கணவருடன் விவாகரத்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இன்னொரு பதிவில் சுசித்ரா கூறியிருக்கிறார்.

suchitra-singer-1ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை! எல்லோரும் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறார்கள் அடுத்த டுவிட்டர் படம் அல்லது காணொளி யாரைப் பற்றியது என்பதைக் காண!

வைக்கி லீக்ஸ் பாணியில் ‘சுச்சி லீக்ஸ்’ என்ற தலைப்பில் நிர்வாணப் படங்களும், காணொளிகளும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, ஒரு காணொளியின் புகைப்படத்தை வெளியிட்டு, இத்தனை மணிக்கு இந்தப் புகைப்படம் சம்பந்தப்பட்ட காணொளி வெளியாகும் என்ற அறிவிப்பு வேறு!

இந்நிலையில் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால், இன்றோ, சுசித்ரா மீண்டும் டுவிட்டர் தளத்திற்குள் வந்து விட்டார். அதிரடியான புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார். ஆனால், உண்மையிலேயே அவர்தான் அதைச் செய்கிறாரா அல்லது வேறுயாரோ அவரது பெயரில் இந்த கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனரா என்பது இதுவரை தெரியவில்லை.

இதனால், தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் திகிலில் உறைந்து போய் இருக்கின்றனர். யாருடைய படம் அடுத்து வரும் – யாருடைய வீட்டில் அடுத்த பூகம்பம் வெடிக்கும் – என்ற ஆரூடங்களால் டுவிட்டர் நிரம்பி வழிகின்றது.

இதுவரையில் ஹன்சிகா மோத்வானி, சஞ்சிதா ஷெட்டி, பாடகி சின்மயி, திரிஷா, நயன்தாரா, அனுயா, அண்ட்ரியா என இந்த சர்ச்சைகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடிகைகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகின்றது.

ஆனால், இதுவரை யாரும் காவல் துறையில் புகார் செய்யவில்லை. காவல் துறையினர் இதுவரை இந்த ஆபாச சர்ச்சைகளில் உள்ளே நுழையவில்லை.

சிரிப்பை வரவழைக்கும் மீம்ஸ் பதிவுகள்

இதற்கிடையில், இந்த சர்ச்சைகள் குறித்த ‘மீம்ஸ்’ என்ற கிண்டல்கள் கேலிகள்தான் நம்மை அதிகம் கவர்கின்றன. வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன! அதில் சிலவற்றைப் பார்ப்போமா!

simbu-danush-meems-twitterதனுஷ் பற்றிய சர்ச்சை என்றார் சிம்பு இல்லாமலா? – சிம்புவையும் கோர்த்து வெளியிடப்பட்டிருக்கும் கிண்டல் பதிவு இது!

twitter-suchitra fans-meemsசுசித்ராவின் அடுத்த புதிய பதிவு என்ன என்பதைக் காண அவரது டுவிட்டர் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள் என்று கூறும் கேலிப் பதிவு இது…

suchitra-meems-twitterடுவிட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கூடி விட்டது என்பதைக் கேலியாகக் கூறும் பதிவு இது….

இது போன்ற பதிவுகளைத் தொடர்ந்து இப்போது, பேஸ்புக் எனப்படும் முகநூல் தளத்தைத் தொடர்பவர்களைக் காட்டிலும், டுவிட்டரின் இணைபவர்களின் எண்ணிக்கை, சுசித்ராவால் கூடிக் கொண்டே போகின்றது, என்பது போன்ற கேலிப் பதிவுகளும் டுவிட்டரில் நிறைந்து கிடக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு