Home Featured கலையுலகம் “அவருக்குப் பெண்ணே கிடைக்கலையா?” – கரணை விமர்சித்த அரசியல் தலைவர்!

“அவருக்குப் பெண்ணே கிடைக்கலையா?” – கரணை விமர்சித்த அரசியல் தலைவர்!

617
0
SHARE
Ad

KARANபுதுடெல்லி – பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருப்பதற்கு பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அரசியல் தலைவர் ஒருவர் கரணைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அசிம் அஸ்மி நேற்று திங்கட்கிழமை கரண் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருமணம் செய்வதற்கு அவருக்குப் பெண்ணே கிடைக்கவில்லையா? அவருக்கு என்ன நோயா? இது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக அவர் ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கலாம். இது ஏழை மக்களுக்கு மீதான ஒரு நகைச்சுவை” என்று தெரிவித்திருக்கிறார்.