Home Featured நாடு வடகொரியாவில் இருந்து வெளியேற மலேசியர்களுக்குத் தடை!

வடகொரியாவில் இருந்து வெளியேற மலேசியர்களுக்குத் தடை!

884
0
SHARE
Ad

30-kim-jong-un-600சியோல் – வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது வடகொரிய அரசு.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வடகொரிய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டிபிஆர்கே-வில் இருக்கும் அனைத்து மலேசியர்களும் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்படுகிறார்கள். மலேசியாவில் நடந்த சம்பவத்திற்குத் தீர்வு கிடைக்கும் வரை இது அமல்படுத்தப்படுகிறது” என்று கொரியாவின் தேசிய செய்தி நிறுவனம் கூறுகின்றது.