Home Featured கலையுலகம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையான கரண் ஜோஹர்!

வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையான கரண் ஜோஹர்!

1115
0
SHARE
Ad

karan-johar-hindi-directorபுதுடெல்லி – பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கிறார்.

இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கரண் ஜோஹர்.

அதில், மருத்துவ அறிவியலின் மகத்துவத்தால், தான் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஆனால் மிகவும் யோசித்து எடுத்த முடிவு தான்” என்றும், கரண் ஜோஹர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ரூகி, யாஷ் என்று தனது ஆண் மற்றும் பெண் குழந்தைக்குப் பெயர் வைத்திருப்பதாகவும் கரண் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், கரண் ஜோகருக்கு பிரியங்கா, அலியா பட் என பிரபலங்கள் பலர் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.