Home Featured கலையுலகம் ஒரு பக்கம் வழக்கு, இன்னொரு பக்கம் ஆபாச சர்ச்சை – கவலையில் தனுஷ் குடும்பம்!

ஒரு பக்கம் வழக்கு, இன்னொரு பக்கம் ஆபாச சர்ச்சை – கவலையில் தனுஷ் குடும்பம்!

1281
0
SHARE
Ad

dhanushசென்னை – தனுஷுக்கு இது போதாத காலம். தனுஷ் தங்கள் மகன் தான் என்று கூறி மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வருகின்றது.

கஸ்தூரி ராஜா, தனுஷ் தரப்பில் இருந்து சமர்ப்பித்த சான்றிதழ் ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், மரபணுச் சோதனை நடத்த வேண்டுமென அத்தம்பதியர் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பாடகி சுசித்ராவின் மூலம் கடந்த இரண்டு வாரமாக பூதாகரமாக வெடித்திருக்கிறது ஆபாச விவகாரம். அதில் சுசித்ரா குற்றம் சாட்டியிருப்பவர்களில் மிக முக்கியமானவர் தனுஷ்.

#TamilSchoolmychoice

தனுஷின் லீலைகள் என்ற பெயரில், அவரது அந்தரங்கப் புகைப்படங்கள், காணொளிகள் என அத்தனையும் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு கடந்த சில நாட்களாக தமிழ்சினிமா வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வராத நிலையில், தனுஷின் சகோதரி விமலா கீதா தனது பேஸ்புக்கில் உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம், பல்வேறு பிரச்னைகளால் மிகவும் வேதனையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு  மனிதனின் கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் எங்களுக்கு உணவும் கல்வியும் நாங்கள் இன்று அனுபவிக்கும் அனைத்தும் கிடைத்தன.”

“தேனியில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்றால் அந்த வசதி ஓர் இரவில் வந்ததல்ல. தியாகம் எதுவும் செய்யாமலும் வந்ததல்ல. எங்கள் சகோதரர்கள் விமர்சனங்களும் அவமானங்களும் பட்டே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்கள்.”

“எங்களுக்கு எவ்விதமான ஒழுக்கங்கள் சொல்லித் தரப்பட்டன? எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தோம்? என்பது கடவுளுக்குத்தான் தெரியும். கடின உழைப்பால் தனுஷ் இன்று மிகப்பெரிய நட்சத்திரம் ஆகியுள்ளார். ஆனால் இந்தப் புகழுக்கு விலை உள்ளது என நினைக்கிறேன். பழிவாங்கும் செயல்கள் எல்லா விதங்களிலும் சாத்தியம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் நடத்தையில் களங்கம் விளைவிப்பது சாத்தியம். ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை வருத்திக்கொள்ளும் நடிகருக்கு இதுதான் கிடைக்குமா?”

“ட்விட்டரில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பதிவு செய்யலாம் என்றாகிவிட்டது. 12 வயது சிறுவன கூட ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கமுடிகிற சமூகவலைத்தளத்தில்தான் மோசமான பாலியல் தொடர்புடைய வீடியோக்கள் வெளியாகின்றன.  இதுபோன்ற மோசமான வீடியோக்களைக் கேட்கும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. எங்கள் குடும்பம் நிறைய சோதனைகளைச் சந்தித்துள்ளது. ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்வோம்.”

“மிகுந்த மனவேதனையுடன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து நான் விலகுகிறேன். யாரிடமும் பேசவோ சந்திக்கவோ விருப்பம் இல்லை. இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் நிறுத்துங்கள். ஒருவர் முக்கியமாக பெண்கள் இதன் விளைவாக சாகும் வரை  சென்றால் அந்த உயிரைத் திருப்பித் தரமுடியுமா? வாழு வாழ விடு” என்று விமலாகீதா கூறியுள்ளார்.

-செல்லியல் தொகுப்பு