கோலாலம்பூர் – வடகொரிய தூதர் காங் சோல், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டுமென கடந்த சனிக்கிழமை விஸ்மா புத்ரா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் வடகொரிய தூதரகத்திற்குள் வாகனங்கள் வந்து போன படி இருக்கின்றன.
இன்று பிற்பகல் நிலவரப்படி, ஜாலான் பாத்தாயில் அமைந்திருந்த வடகொரிய தூதரகத்தைச் சுற்றி வளைத்த ஆயுதமேந்திய காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
எனினும், காங் சோல் இன்னும் அங்கிருந்து வெளியேறவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. காங் சோல் நாட்டை விட்டு வெளியேற இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் வடகொரிய தூதர் காங் சோல் நேரில் வர வேண்டுமென விஸ்மா புத்ரா அழைத்திருந்தது. எனினும், அவர் நேரில் ஆஜராகவில்லை என்பதால், இன்று மார்ச் 6-ம் தேதிக்குள், காங் சோல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என விஸ்மா புத்ரா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.