Home Featured நாடு வடகொரிய தூதரக அதிகாரிகள் வெளியேறத் தடை – மலேசியா பதிலடி!

வடகொரிய தூதரக அதிகாரிகள் வெளியேறத் தடை – மலேசியா பதிலடி!

805
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் அங்கிருந்து வெளியேறத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, மலேசியாவில் இருக்கும் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் இங்கிருந்து வெளியேறத் தடைவிதித்து பதிலடி கொடுத்திருக்கிறது மலேசியா.

சற்று முன்பு மலேசியத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அவசர செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி இத்தகவலை வெளியிட்டார்.

“இதைச் செய்ய வேண்டுமென்று நாம் நினைக்கவில்லை. ஆனால் வேறுவழியில்லை” என்று சாஹிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தத் தடை உத்தரவு மலேசியாவில் இருக்கும் வடகொரியத் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே என்று குறிப்பிட்ட சாஹிட், மலேசியாவில் இருக்கும் மற்ற வடகொரிய நாட்டவர்களுக்கு இல்லை என்று சாஹிட் தெரிவித்தார்.