Home Featured நாடு பாதிரியார் கடத்தல்: சந்தேக நபர் கைது!

பாதிரியார் கடத்தல்: சந்தேக நபர் கைது!

790
0
SHARE
Ad

Pastor_Koh1கோலாலம்பூர் – பாதிரியார் கோ கெங் ஜூ மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் வழக்கில், முதற்கட்ட முன்னேற்றமாக, சந்தேக நபர் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

சிலாங்கூர் மாநிலம் அம்பாங்கில், 32 வயதான அந்நபர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் சமா மாட் தெரிவித்தார்.

தற்போது அந்நபரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.