Home Featured நாடு ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கைது!

ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கைது!

732
0
SHARE
Ad

Abdul-Latif-Bandiஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி, இன்று வியாழக்கிழமை காலை 10.50 மணியளவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஒரு வீடமைப்பு மற்றும் நில விவகாரம் தொடர்பிலான ஊழல் புகாரினால், மாநில அரசாங்கத்தில் தான் வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து அப்துல் லத்தீப் விடுமுறையில் இருந்து வருகின்றார்.

அப்துல் லத்திப்பின் சிறப்பு உதவியாளரும் அவரது மகனும் ஏற்கனவே, ஊழல் தடுப்பு ஆணையத்தால் பிப்ரவரி 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.