வாஷிங்டன் – அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான ‘பூஞ்சைத் தொற்று- Fungal infection’ ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை, அமெரிக்க மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்திருக்கிறது.
கேண்டிடா ஆரிஸ் (Candida auris) என்ற இந்த தொற்று, கடந்த 2009-ம் ஆண்டு, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானில் காதில் ஏற்படும் தொற்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்றுவியாதி, பின்னர் கொலம்பியா, இந்தியா, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
இரத்த நாளங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த தொற்று, மனிதர்களின் தோலில் பல மாதங்கள் தங்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
இந்தத் தொற்று வியாதி வந்தவர்களில் 60 விழுக்காட்டினர் மரணமடைந்திருப்பதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.
தற்போது நியுயார்க்கில் இந்தத் தொற்று வியாதிக்கு 30 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.