Home Featured இந்தியா உ.பி : 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை; சமஜ்வாடி-காங்கிரஸ் – 25 :

உ.பி : 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை; சமஜ்வாடி-காங்கிரஸ் – 25 :

704
0
SHARE
Ad

BJP-ultra-new-+-big

புதுடில்லி – (மலேசிய நேரம் காலை 11.30 நிலவரம்) மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்தபடி முன்னிலை வகிக்கிறது.

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரையில் 102  தொகுதிகளில் பாஜக முன்னணி வகிக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜக அதிர்ச்சி தரும் வகையில் முன்னணி வகிக்கிறது .

#TamilSchoolmychoice

அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 25 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

மாயாவதி தலைமையிலான பிஎஸ்பி எனப்படும் பகுஜன் சமாஜ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்றும், இது மோடியின் பிரச்சாரத்திற்கும், தலைமைக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி எனக் கருதப்படுகின்றது.