Home Featured இந்தியா பஞ்சாப்: 50 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

பஞ்சாப்: 50 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

792
0
SHARE
Ad

Congress-partyபுதுடில்லி – (மலேசிய நேரம் நண்பகல் 12.00 மணி நிலவரம்) உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி ஆறுதல் பெறும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னணி வகிக்கிறது.

மொத்தமுள்ள 117 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் இதுவரையில் 50 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாகக் களமிறங்கியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

#TamilSchoolmychoice

பாஜக-அகாலிதளம் கூட்டணி 25 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. கடந்த இரண்டு தவணைகளாக இங்கு ஆட்சியில் இருக்கும் அகாலிதளம் கட்சியின் மீதான ஊழல் புகார்கள், அந்தக் கட்சியின் தலைமையேற்றிருக்கும் பாதல் குடும்பத்தினர் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்திகள், எல்லாம் சேர்ந்து பாஜவுக்கும் இந்த மாநிலத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, இனி பாஜக இந்த மாநிலத்தில் தனித்து நின்றே தேர்தல் களங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.