Home Featured நாடு ‘டத்தோஸ்ரீ’ வீட்டில் 39 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!

‘டத்தோஸ்ரீ’ வீட்டில் 39 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!

677
0
SHARE
Ad

guns-1காஜாங் – செராசில், பண்டார் துன் ஹுசைன் ஆன் பகுதியில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 39 வயதான நபர் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

ஜாலான் சுவாகாசி 2/2-ல் இருந்த அந்த மூன்றடுக்கு மாடி வீட்டில், அந்நபர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கின்றது.

இறந்தவர் ஜாலான் ஈப்போவைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் தெரிவித்திருக்கும் காவல்துறை, அவரது பெயரை வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

அதிகாலை 3 மணியளவில் 39 வயதான அந்நபர், அந்த வீட்டின் உரிமையாளரான 54 வயதான முக்கியப் பிரமுகரை சந்திக்க வந்ததாகக் கூறப்படுகின்றது.

3-வது மாடியில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், தான் ஓடிச் சென்று பார்த்த போது, அந்நபர் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், இறந்து கிடந்ததாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் மர்மங்கள் இருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதால், முக்கியப் பிரமுகர் உட்பட 13 பேரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

இதனிடையே, அந்த 3 அடுக்கும் மாடி வீட்டின் உரிமையாளர், ‘டத்தோஸ்ரீ’ பட்டம் கொண்டவர் என்று அண்டை வீட்டார் தெரிவித்திருப்பதாக, ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

படம்: கோப்புப் படம்