கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் கொல்லப்பட்ட வடகொரிய நாட்டவர், கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களது பணி நிறைவு பெற்றுவிட்டதால், நாங்கள் அவரது (கிம் ஜோங் நம்) சடலத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கிறோம். எப்படி நாங்கள் அடையாளம் கண்டோம் என்பது குறித்து விரிவாகக் கூற இயலாது” என்று தெரிவித்தார்.
கிம் ஜோங் நம்மின் உறவினர்கள் யாராவது வந்து மரபணு மாதிரியைக் கொடுத்தார்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த காலிட், அது குறித்து விரிவாகக் கூற இயலாது என்று தெரிவித்தார்.