ஈப்போ – பறவைக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஈப்போ பள்ளியைச் சேர்ந்த சுமார் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண சளிக் காய்ச்சல் தான் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
“அது எச்1என்1 இல்லை. பருவகால சளிக்காய்ச்சல் தான்” என்று பேராக் சுகாதாரக் கமிட்டி தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறியிருக்கிறார்.
ராஜா பெரும்புவான் தாயா என்ற பள்ளியில் பறவைக் காய்ச்சல் பரவியதாக எழுந்த சந்தேகங்களை அடுத்து, சுமார் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (The Star)