புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 4.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வண்ணம், பாஜக தனித்து 309 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 316 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றது. சமஜ்வாடி-காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கின்றது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து வரலாறு காணாத வெற்றியை – மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்குக்கும் மேலாக பாஜக வெற்றி கொண்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில்….
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னணி வகிக்கிறது. 77 தொகுதிகளை அந்தக் கட்சி பெற்றுள்ள வேளையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளை வென்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
பாஜக-அகாலி தளம் கூட்டணி 17 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் வெற்றிக்குக் காரணம் கேப்டன் அமரிந்தர் சிங் என்பவரின் தலைமைத்துவம்தான் காரணம் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அமரிந்தர் சிங் அவர் போட்டியிட்ட லம்பி தொகுதியில் பிரகாஷ் சிங் பாதலிடம் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.